இந்த பதிவில் கார தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக தோசை இட்லி தான் இருக்கும். ஏனெனில், இது தான் ஈஸியான ரெசிபி. அதுமட்டுமின்றி, வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் காலை இரவு உணவை விரைவில் செய்து முடிப்பதற்காக தோசை இட்லி தான் தேர்வு செய்வார்கள். அதுவும் குறிப்பாக, பலர் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எப்போதும், இது மாதிரி சாப்பிட்டால் அலுத்துப்போய்விடும். அப்படி உங்களுக்கு அலுத்துப்போய்விட்டதா..? உங்களுக்கான ஒரு சூப்பரான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தோசை பிரியராக இருந்தால் எப்போதும் வெறும் தோசையை சுட்டு சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு முறை 'கார தோசை' செய்து சாப்பிடுங்கள். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும் மற்றும் இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது. இந்த தோசையை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்து கொண்டுங்கள் மீண்டும் மீண்டும் இந்த தோசை செய்து தருமாறு கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் கார தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 படி
பச்சரிச்சி - 1 கை
பெரிய வெங்காயம் - 4
வர மிளகாய் - 15
துவரம் பருப்பு - 1/2 கப்
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: இந்த மாதிரி ஒரு தோசையை நீங்க சாப்பிடிருக்க வாய்ப்பே இல்ல.. கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணுங்க!
செய்முறை:
கார தேசை செய்ய முதலில், இட்லி அரிசி பச்சரிசி துவரம் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதனை அடுத்து, கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் எடுத்து வைத்த மிளகாய் மற்றும் ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக அரைத்து, உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் குளிக்க வைக்க வேண்டும். வெங்காயம் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து வைத்த மாவில் கலக்க வேண்டும். இப்போது கார தோசைக்கான மாவு தயார்.
இப்போது தோசை சுட, அடுப்பில் தோசை கல் வைக்கவும். கல் சூடானதும், அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பிறகு கலந்து வைத்த மாவை அதில் வட்ட வடிவில் ஊற்றி தோசை சூட்டு எடுத்தால், கார தோசை ரெடி!! இதற்கு நீங்கள் தேங்காய் தோசை மட்டும் வைத்து சாப்பிட்டால் போதும். இந்த ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D