இன்று உங்கள் வீட்டில் காலை உணவாக முட்டை பராத்தா செய்து அசத்துங்கள். ரெசிபி இங்கே..
எப்போதும் உங்கள் வீட்டில் காலை உணவாக இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? வித்தியாசமான முறையில் என்ன செய்வது என்று தெரியவில்லையா..? உங்களுக்கான பதிவு தான் இது. ஆம்.. எப்படி எனில் உங்கள் வீட்டில் முட்டையும், கோதுமை மாவும் இருந்தால் சத்தான மற்றும் சுவையான ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம். மேலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது. அது வேறு ஏதும் இல்லங்க.. 'முட்டை பராத்தா' தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது முட்டை பராத்தா எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
முட்டை - 3 (வேக வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: அட்டகாசமான சுவையில் மொறு மொறு கார தோசை.. ரெசிபி இதோ..!
செய்முறை:
முட்டை பராத்தா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டைகளை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கிளறி விடுங்கள்.
இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி உங்கள் கையால் ஒருமுறை நன்கு கிளறி விடுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். இப்போது அதை 5 நிமிடம் மூடி வையுங்கள். 5 நிமிடம் கழித்து, அந்த மாவை உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் பனீர் மசாலா தோசை..! ரெசிபி இதோ..!
இப்போது நீங்கள் அந்த உருண்டையில் ஒன்றை எடுத்து, ரொம்பவே மெல்லியதாக சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து, அதன் நடுவே, ஏற்கனவே செய்து வைத்த முட்டை மசாலாவை ஒரு 2 ஸ்பூன் மாவின் மேல் வைத்து, அதை மாவின் ஒரு பகுதியில் மட்டும் அரை வட்ட அளவிற்கு பரப்பி விட்டு, அதை மடித்து முனைகளை கைகளால் ஒருமுறை அழுத்தி விட்டு, ஒரு ஃபோர்க் ஸ்பூனால் மீண்டும் அழுத்துங்கள்.
அதன் பிறகு, ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடானதும், எண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ளதை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுங்கள். அவ்வளவு தான் இப்போது ருசியான சுவையில் முட்டை பராத்தா ரெடி!! இதனை நீங்கள் வெறுமனே சாப்பிட்டால் கூட நன்றாக தான் இருக்கும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது இந்த ரெசிபி உங்கள் வீட்டில் செய்து பார்த்தாலோ உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D