இந்தக் கோடையில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைக்க நுங்கு சர்பத் எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
'நுங்கு' கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் அரிதாகவே காணப்படும் ஒரு பழமாகும். நுங்கு ஆங்கிலத்தில் 'ஐஸ் ஆப்பிள்' என்று அழைக்கப்படுகிறது. மற்றும் இது தென்னிந்தியாவில் தான் பெரும்பாலும் காணப்படுகிறது. கோடையில் இந்த பழம் சாப்பிட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இது தவிர, இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இது எடையைக் குறைக்க உதவியாக இருக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
ஊட்டச்சத்துக்கள்:
நுங்கில், கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறைந்த கலோரிகள் கொண்ட இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. எனவே, கோடையில் சாப்பிட கூடிய சிறந்த பழமாக கருதப்படுவதில் ஆச்சரியமில்லை..!
undefined
இதையும் படிங்க: Summer Drink : கோடையில் குளூ குளூ.. உடனே நுங்கு ஜூஸ் செய்து குடிங்க.. ரெடிபி இதோ!!
நுங்கு நன்மைகள்:
இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள இந்த பழத்தில் சர்பத் செய்து குடித்து இருக்கிறீர்களா..? 'நுங்கு சர்பத்' என்பது தென்னிந்தியாவில் விற்கப்படும் ஒரு பிரபலமான ரோட்டோர பானம் ஆகும். நுங்கு சர்பத் மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். கோடையில் இந்த பானத்தை குடித்தால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி குடிப்பார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் நுங்கு சர்பத் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்..
இதையும் படிங்க: Nungu Benefits : கோடை சீசனில் நுங்கு ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் தெரியுமா..? அதன் நன்மைகள் இதோ!!
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1/2
நன்னாரி சிரப் - 3 ஸ்பூன்
நுங்கு - 1/4 கப்
பனிக்கட்டி - 1/4
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
நுங்கு சர்பத் செய்ய முதலில் நுங்கை நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒருவேளை உங்களால் மென்மையாக பிசைய முடியவில்லை என்றால், அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்து எடுக்க வேண்டும். இப்போது ஒரு கண்ணாடி கிளாஸில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகள், பிறகு அரைத்து வைத்த நுங்கு, அதன் மேல் நன்னாரி, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான நுங்கு சர்பத் ரெடி!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D