Parenting Tips : உங்கள் குழந்தைக்கு சரியான படிப்பை தேர்வு செய்ய குழப்பமாக இருக்கா..? இந்த 10 வழிகள் உதவும்!

By Kalai SelviFirst Published May 6, 2024, 11:50 AM IST
Highlights

உங்கள் குழந்தைக்கு எந்த ஸ்ட்ரீம் சிறந்தது என்பதை பற்றி நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பது என்பது இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை...

பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த  நிலையில், குழந்தைகளும், பெற்றோர்களும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பின் எந்த பாடத்தை தேர்வு செய்வது என்ற கவலை அவர்கள் மத்தியில் எழும். அறிவியல், வணிகம் அல்லது கலை என  திசையில் முன்னேற வேண்டும்?பெரும்பாலும் மாணவர்கள் ஒரு ஸ்ட்ரீமைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய திறமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உண்மையில், இங்கிருந்துதான் எதிர்காலத்தில் எந்த துறையில் உங்கள் நகர்வை செய்வீர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தை எங்க துறையில் தொடர வேண்டும் என்பதை குறித்து கவலைப்படுகிறார்கள் இது போன்ற சூழ்நிலையில், பெற்றோர்களின் டென்ஷனை குறைக்க இந்த தொகுப்பில் சில குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் உதவியுடன் உங்கள் குழந்தையின் ஸ்ட்ரீமைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

இதையும் படிங்க: Parenting Tips : பிறந்த குழந்தையின் கண்களில் மை வைப்பது நல்லதா..? உண்மையும் கட்டுக்கதைகளும் இதோ!

சரியான ஸ்ட்ரீமை தேர்வு செய்ய பெற்றோர்கள் எப்படி குழந்தைகளுக்கு உதவுவது:

உங்கள் பிள்ளையை சரியான திசையில் வழிநடத்த சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

  • முதலில், உங்கள் பிள்ளையின் பலம் மற்றும் ஆர்வங்களைக் கண்டறியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தன்னுடைய விருப்பு வெறுப்புகளை சொல்லும் போது அதை கவனமாகக் கேளுங்கள்.
  • உங்கள் பிள்ளையை கோடைகாலப் பயிற்சியில் ஈடுபட ஊக்குவியுங்கள்.மேலும், உங்கள் குழந்தை எதில் திறமையானவர் என்பதைக் கண்டறிய அவரது நண்பர்கள் மற்றும் வழிகாட்டிகளிடமிருந்து கருத்துக்களைப் பெறுங்கள்.
  • ஒருவேளை, உங்கள் பிள்ளையின் திறமை எதுவென்று சரியாக உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவர் பயிற்சி பெற்ற உளவியலாளரால் நடத்தப்படும் திறனாய்வுப் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். அவை நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
  • அதுபோல, உங்கள் குழந்தையை தொழில் வழிகாட்டி ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில், இதன்மூலம் உங்கள் பிள்ளை என்ன செய்ய விரும்புகிறது  என்பதைப் பற்றி சுலபமாக அறிந்து கொள்ளலாம். மேலும் இது உங்கள் குழந்தையின் ஆர்வத்தை பொருத்து அவர்களின் வாழ்க்கையைத் திட்டமிடலாம்.
  • உங்கள் பிள்ளையின் எல்லைகளை விரிவுபடுத்தவும், அவர்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவை எடுக்கவும், அவர்களை கல்வி கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். இதுபோன்ற கண்காட்சிகளில், அவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகள் பற்றி மட்டுமல்ல, தகுதிக் காரணிகளையும் சுலபமாக தெரிந்துகொள்வார்கள்.
  • நீங்களும் உங்கள் குழந்தையும் இணைந்து இணையத்தில் மூன்று ஸ்ட்ரீம்களில் உள்ள பல்வேறு தொழில் விருப்பங்களைப் பற்றி போதுமான ஆராய்ச்சி செய்யுங்கள்.
  • உங்கள் பிள்ளை மூலம் உங்கள் கனவுகளை நனவாக்க முயற்சிக்காதீர்கள். மேலும், அவர்களால் நிறைவேற்ற முடியாத நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் வைத்திருப்பது நியாயமில்லை.
  • உங்கள் பிள்ளையின் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாக வைத்து எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். ஏனெனில், ஒருவேளை அவர்கள் கல்வியில் மிகச் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம். மேலும், கல்வி அல்லாத துறையில் சிறந்து விளங்குவதற்கான திறன்கள் அவர்களிடம் இருக்கலாம்.
  • பொருளாதார ரீதியாக லாபகரமான தொழில் என்று நீங்கள் நினைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் குழந்தையின் விருப்பங்களில் மட்டும்  கவனம் செலுத்துங்கள்.
  • தொழில் தேர்வுகள் உங்கள் பிள்ளையின் வாழ்க்கைக்கு நல்ல பாதையாக இருந்தாலும் கூட, தனது சொந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு 
  • சுதந்திரம் கொடுங்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைக்கு நீச்சல் சொல்லி கொடுக்கீங்களா..? அப்ப 'இந்த' விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

இந்நிலையில், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு அவர்கள் எடுக்கும் முடிவு முக்கியமானது. இதற்கு பெற்றோர்களின் உதவியும் அவசியம். அதுமட்டுமின்றி பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள் உள்ளன. எனவே, முடிவெடுக்கும் போது நீங்கள் உங்கள் குழந்தையின் ஆர்வங்கள் மற்றும் திறன்களை முன்னணியில் வைத்திருந்தால், உங்கள் குழந்தை பிரகாசமான மற்றும் திருப்திகரமான தொழில் வாழ்க்கையைப் பெறுவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!