வீட்ல கோதுமை மாவு இருக்கா..? அப்போ ஒரு முறை முட்டைய வச்சு இந்த டிபன் செஞ்சு பாருங்க.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published May 6, 2024, 7:30 AM IST

இன்று காலை உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் விதமாக கோதுமை மாவில் முட்டை தோசை செய்து கொடுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தினமும் உங்கள் வீட்டில் காலை உணவாக இட்லி தோசை செய்து செய்கிறீர்களா..? இந்த உணவை உங்கள் குழந்தை சாப்பிட விரும்பவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடும் விதமாக  ஒரு சூப்பரான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம். அது வேறு ஏதும் இல்லைங்க 'கோதுமை முட்டை தோசை' தான்.  இந்த தோசையை உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள் அவர்களுக்கு போர் அடிக்கவே அடிக்காது.

இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, ஒருமுறை இதை நீங்கள் காலை உணவாக செய்து கொடுத்தால், குழந்தைகள் அடிக்கடி கேட்பார்கள். சரி வாங்க இப்போது இந்த கோதுமை முட்டை தோசை எப்படி செய்வதென்று இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்: 
முட்டை - 3
பால் - 1 கப்
கோதுமை மாவு - 3/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1 (நறுக்கியது)
வெங்காயம் - 1(நறுக்கியது)
தக்காளி - 1(நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
சீஸ் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவில் முட்டை தோசை செய்ய முதலில், முதலில் ஒரு கிண்ணத்தில் 1 முட்டையை உடைத்து அதில் ஊற்றி, அதனுடன் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த 1 கப் பால் மற்றும் கோதுமை மாவு சேர்த்து கட்டிகள் விழாமல் நன்கு கலக்க வேண்டும். இதனை அடுத்து, ஒரு கிண்ணத்தில், 2 முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி, அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பிறகு, அடுப்பில் தோசை கல் வைத்து, கல் சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதன் மேல்கலந்து வைத்துள்ள கோதுமை மாவை ஊற்றுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து கலந்து வைத்த முட்டை கலவையை ஒரு கரண்டியை கொண்டு அதன் மேல் ஊற்றி மேலே பரப்பி விட்டுங்கள். பிறகு தோசையை திருப்பி போடு அதன் மேல் சீஸை துருவிப் போட்டு மூடி போட்டு வேக வைத்து எடுங்கள். அவ்வளவுதான் இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை முட்டை தோசை ரெடி!! இதனுடன் நீங்கள் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை கண்டிப்பாக ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.

click me!