கிராம்பு சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும். இதைப் படித்ததும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? ஆனால் அதுதான் உண்மை. எப்படி தெரியுமா..?
கிராம்பு மிகவும் ஆரோக்கியமான மூலிகை மற்றும் ஒரு சமையல் மசாலா பொருள் ஆகும். இது பல நோய்களைக் குணப்படுத்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இது பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க வல்லது.
அதன் ஆரோக்கிய நன்மைகள் இத்துடன் முடிவடையவில்லை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் உள்ளன. இது உடலை பல நோய்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இது புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி கிராம்பு சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும்.
undefined
இதைப் படித்ததும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? ஆம், அதுதான் உண்மை. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், கிராம்புகளை உடனே பயன்படுத்துங்கள். சரி வாங்க இப்போது உடல் எடையை குறைக்க கிராம்பு எப்படி பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் மற்ற நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் இங்கே..
இதையும் படிங்க: Weight Loss : உடல் எடையை குறைக்கும் போது 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க!
கிராம்புகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், ஃபோலேட், நார்ச்சத்து, வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், செலினியம், தயாமின், சோடியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற பல வகையான சத்துக்கள் கிராம்புகளில் உள்ளன. இது தவிர, இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: Makhana : காலையில் வெறும் வயிற்றில் மக்கானா சாப்பிடுங்க.. 'Slim' ஆகுவது உறுதி!
எப்படி உபயோகிப்பது?
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கிராம்பை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு: உடல் எடையை குறைக்க கிராம்பு சாப்பிட்ட வேண்டாம். காரணம், அது சூடான தன்மை உடையது. எனவே, இதை அதிகமாக சாப்பிட்டால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு. மேலும் இதில் இருக்கும் இரசாயனங்கள் குடலின் செயல்பாட்டை பாதித்து, இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, இதை அதிகமாக எடுத்து கொண்டால் தசை வலி மற்றும் சோர்வு ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D