Lok Sabha Election : தொடங்கியது 3ஆம் கட்ட வாக்குப்பதிவு.. எத்தனை தொகுதி.? முக்கிய வேட்பாளர்கள் யார் தெரியுமா.?

By Ajmal KhanFirst Published May 7, 2024, 6:57 AM IST
Highlights

குஜராத்தில் உள்ள 25 தொகுதி உட்பட நாடு முழுவதும் 93 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க காலையில் இருந்து மக்கள் ஆர்வமோடு வரிசையில் காத்துள்ளனர்.
 

3ஆம் கட்ட தேர்தல் தொடங்கியது

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 3ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன் தினம் மாலை ஓய்ந்த நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன் படி,  குஜராத்தில் 25 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள், கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

நட்சத்திர வேட்பாளர்கள் யார்.?

இதில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.3வது கட்டமாக நடைபெறும் 93 தொகுதிகளில் 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் நட்சத்திர வேட்பாளர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார்,   திக்விஜய சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் , மெயின்புரி தொகுதியில் களம் கண்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகள்.. சாமானியர்களின் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது - ராகுலை சாடும் அகிலேஷ் மிஸ்ரா!

அடுத்த கட்ட தேர்தல் எப்போது.?

இன்றோடு சேர்ந்து 283 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடையும், இதனை தொடர்ந்து அடுத்த 4 கட்ட தேர்தல்கள் மே மாதம் 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

click me!