தலையில் வழுக்கை விழாமல் இருக்க.. முடி வேகமாக வளர.. கருவேப்பிலை ஹேர் பேக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!

First Published Feb 19, 2024, 4:17 PM IST


முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க கருவேப்பிலை கொண்டு இந்த ஹேர் பேக்குகளை முயற்சி செய்யுங்கள். 

முடி உதிர்தல் பிரச்சனை இன்றைய காலத்தில் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது. பல வழிகளில் முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. நாட்கள் செல்லச் செல்ல இப்பிரச்சினை அதிகரித்து கொண்டே தான் இருக்கும். இது அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எனவே முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
 

ஒரு நாளைக்கு 100 முடி உதிர்வது சகஜம். ஆனால் அதைவிட அதிகமான முடிகள் இருப்பது ஒரு பிரச்சனையாகவே கருத வேண்டும். அதிகப்படியான முடி உதிர்தல் இறுதியில் வழுக்கைக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையை போக்க கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இந்த இலை சமையலின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் மிகவும் நல்லது. அதை எப்படி பயன்படுத்துவது? இங்கே தெரிந்து கொள்வோம்..

கறிவேப்பிலையுடன் வெந்தயத்தை கலந்து தலைமுடியில் பூசுவது சிறப்பான பலனைத் தரும். இதற்கு நெல்லிக்காய் சாறு மற்றும் வெந்தய விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை சாறு சேர்க்கவும். பின்னர் இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவவும்.
 

கறிவேப்பிலையை தயிருடன் கலந்து முடியில் தடவுவதும் பலன் தரும். இந்த இரண்டு பொருட்களும் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஹேர் பேக் செய்வது மிகவும் எளிதானது. ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து கறிவேப்பிலையுடன் கலக்கவும். இந்த கலவையை முடிக்கு தடவவும்.

இதையும் படிங்க:  தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்? வியப்பான உண்மைகள்!

வெங்காயம் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. முடி உதிர்வதைத் தடுக்க பலர் வெங்காயச் சாற்றைத் தடவுகிறார்கள். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முதலில் கறிவேப்பிலையை அரைத்து எடுத்து கொள்ளவும். பின் இதனுடன் வெங்காய சாறுடன் கலக்கவும். இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 நிமிடம் விட்டு.. பிறகு ஷாம்பு போடவும். 

இதையும் படிங்க:  Curry leaves benefits: இதய நோய், சுகர்...கொலஸ்ட்ராலுக்கு தீர்வு தரும் கருவேப்பிலை டீ..? எப்படி தயார் செய்வது!

மேலே குறிப்பிட்டுள்ள ஹேர் பேக்குகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனை நீங்குவதுமட்டுமின்றி முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!