தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மாவிற்கு 10 ஆண்டு தண்டனை கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷண்முகம் அரிவாளை எடுத்து கொண்டு சௌந்தரபாண்டியை கொல்ல கிளம்ப மறுபக்கம் பாண்டியம்மா ஜெயிலுக்குள் வர ஏற்கனவே ஜெயிலுக்குள் இருக்கும் சூடாமணி மற்ற கைதிகளுடன் சேர்ந்து வாடி வாடி வசமா வந்து மாட்டிக்கிட்ட என்று வரவேற்கிறாள்.
24
Zee Tamil Anna Serial
இதையடுத்து சௌந்தரபாண்டியை எல்லாரும் ரவுண்டு கட்டி திட்ட எல்லாரும் போங்க அந்த ஷண்முகம் எப்படியும் என்னை கொல்ல வருவான், காலை வரைக்கும் உயிரோட இருப்பேனானு தெரியாது என்று சொல்கிறார். அதே போல் அரிவாளை எடுத்து வரும் சண்முகத்தை பார்க்கும் ரமேஷ் எங்க போற என்று கேட்க அந்த சௌந்தரபாண்டியை வெட்ட போவதாக சொல்லி கிளம்புகிறார்.
ரமேஷ் பரணிக்கு தகவல் கொடுக்க அவள் பதறி போய் சண்முகத்தை தடுத்து நிறுத்த கிளம்பி வருகிறாள். மறுபக்கம் சூடாமணி வார்டன் உதவியுடன் பாண்டியம்மாவை அடி வெளுத்தெடுத்து கதற விடுகிறாள், இனிமே உனக்கு தினம் தினம் இப்படி நன்றாக வேதனை தான் என்று சொல்ல பாண்டியம்மா எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள்.
44
Anna serial Today Episode
அடுத்த நாள் காலையில் சூடாமணி இறந்ததாக தகவல் வர பாண்டியம்மா என்னமோ நான் தப்பே பண்ணலனு நிரூபித்து வெளியே வருவேன், உண்மையை நிருபிப்பேனு சவால் எல்லாம் விட்டா, ஆனால் இப்போ எதுவுமே செய்யாமல் செத்து போய்ட்டா என்று சந்தோசப்படுகிறாள். வார்டன் ஷண்முகத்திற்கு தகவல் கொடுக்க சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.