தமிழக அரசின் வேலைவாய்ப்பு
தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பள்ளிப்படிப்பை முடித்தும், கல்லூரி படிப்பை முடித்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். சிலர் அரசு பணிக்காக முயற்சிக்கிறார்கள், பலர் அதிக சம்பளத்திற்காக தனியார் வேலைக்காக பல்வேறு நேர்காணலில் கலந்து கொள்கிறார்கள். இவர்களை தவிர்த்து மற்றவர்கள் சொந்த உழைப்பில் வாழ வேண்டும். சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என முயற்சிப்பார்கள்.
இப்படி பல வித மனநிலையில் உள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் இணைய ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்காக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவும் உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனங்கள்
அதே நேரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசோடு இணைந்து தனியார் நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலையில் இணைந்து வருகின்றனர். மேலும் சொந்த தொழில் தொடங்குபவர்களுக்காக பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது.
வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி, பேக்கரி தொழில் தொடங்குவதற்கான பயிற்சி, டிஜிட்டல் துறை பயிற்சி என பல வித பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு
ஏற்கனவே ஜெர்மனி, சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மலேசியாவில் பல்வேறு டெக்னிசீயன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எந்த எந்த பணிக்கு ஆட்கள் தேவை
மலேசியாவில் பணிபுரிய Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen. Piping Supervisor. Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer Inspector. ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.
ஊதியம் எவ்வளவு
மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன் 44 வயதிற்கு உட்பட்ட Welder(6G-Tig & Arc) பணிக்கு 45,760/- Welder (Tig & Arc-Stainless Steel Alloy)பணிக்கு 54,080 சம்பளமும், Pipe filter பணிக்கு ரூ.41,600/- Rigger பணிக்கு ரூ.33,280/-, Semiskilled Grinder பணிக்கு 29,120/-, Piping Foremen பணிக்கு 58,240/-Piping Supervisor பணிக்கு 60,000/-, Tank Fitterபணிக்கு 41,600/-.
Tank Foreman பணிக்கு 58,240/-, Assistant Fitter பணிக்கு ரூ.33,280/-, Electrician பணிக்கு ரூ.37,440/-. 3G/4G Welder பணிக்கு 37.440/- Planning Engineer (Primavera P6)70,000/- Qc inspector (Cswip 3.1) பணிக்கு ரூ.80,000/-, ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
job
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் 04.10.2024 மற்றும் 05.10.2024 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் தங்களின் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
நேர்காணல் நடைபெறும் இடம்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி சென்னை -32
கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.