தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் கல்வி இடை நிற்றலை தடுக்கும் வகையில் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
மேலும் மகளிர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவி திட்டம், சுய உதவி குழு மூலம் கடன் உதவி திட்டம் என பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு சார்பாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.