திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக ஆண்டுதோறும் செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து நாளை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புறப்படுகிறது. இதில், 10,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காலை 10.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.