சென்னை மக்களே! 66 தாழ்தள பேருந்துகள்! எந்ததெந்த வழித்தடத்தில் எத்தனை பஸ் இயக்கம்! இதோ முழு விவரம்!

First Published Sep 28, 2024, 8:09 AM IST

Chennai Low Floor Buses: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக, 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Low Floor buses

சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்து வந்த தாழ்தளப் பேருந்து சேவை குறுகிய சாலைகள், மெட்ரோ பணி உள்ளிட்ட பல்வேறு காரணமாக தாழ்தளப் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் தாழ்தளப் பேருந்துகள் இயக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. 

Chennai Low Floor buses


இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் முதியவர்கள் எளிதாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது. 

Latest Videos


Municipal Transport Corporation

இப்பேருந்துகளில் குளிர்சாதன வசதி இல்லை என்றாலும் குளிர் சாதன வசதிகள் கொண்ட பேருந்தை போல இதன் கட்டமைப்பு நவீன தொழில்நுட்பத்துடன் வடிவகைப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் தனியாங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் போர்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 58 பேருந்துகள் பிராட்வே - கோவளம், கோயம்பேடு - கிளாம்பாக்கம், திருவொற்றியூர் - பூந்தமல்லி உள்ளிட்ட 17 வழித் தடங்களில் இயக்கப்படுகின்றன. 

Disabled people

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பேருந்துகள் அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி, தாம்பரம் - செங்குன்றம், கோயம்பேடு - அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 11 வழித் தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Elderly people

 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் எந்ததெந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்

வழித்தடம் எண் D70 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு 5 பேருந்துகள்,  தடம் எண் 104 தாம்பரத்திலிருந்து செங்குன்றத்துக்கு 5 பேருந்துகள், தடம் எண் 6D டோல்கேட் முதல் திருவான்மியூர் வழித்தடத்தில் 8 பேருந்துகள்,  தடம் எண் 101 திருவெற்றியூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 2 பேருந்துகள், தடம் எண் 104 C கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் வழித்தடத்தில் 9 பேருந்துகள் இயக்கப்படும்.

Low Floor buses route

மேலும் 27B கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் வழித் தடத்தில் 5 பேருந்துகள்,  தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் வழித்தடத்தில் 5 பேருந்துகள், தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லக்கூடிய தடம் எண் 515 கொண்ட 5 பேருந்துகள், தடம் எண் 70G வடபழனி முதல் கூடுவாஞ்சேரி செல்லும் வழித்தடத்தில் 6 பேருந்துகள், தடம் எண் 18AET கிளம்பாக்கம் முதல் பிராட்வே செல்லும் வழித்தடத்தில் 10 பேருந்துகள்,  தடம் எண் 21G பிராட்வே முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்ல 6 பேருந்துகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது.

click me!