சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து! ஆனால்! பொதுமக்கள் சிரமத்தை போக்க களத்தில் இறங்கிய எம்டிசி!

Published : Sep 22, 2024, 09:31 AM IST

Chennai Electric Train: சென்னை புறநகர் ரயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்தில் பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

PREV
15
சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து! ஆனால்! பொதுமக்கள் சிரமத்தை போக்க களத்தில் இறங்கிய எம்டிசி!
Electric Train

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து வைப்பதில் புறநகர் ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என நாள்தோறும்  லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரயில்கள் அவ்வப்போது பயணிகளின் பாதுகாப்பு கருதி தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் சிக்னல் பணிகள் காரணமாக குறிப்பிட்ட வழித்தடங்களில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவது வழக்கம். 

25
Chennai Electric Train

மேலும் ரயிலின் நேரம் மற்றும் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்படும். இது குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல பல்லாவரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
Metropolitan Transport Corporation

ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். இதனால் பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

45
Special Buses

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

55
Chennai MTC Bus

எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிக்கவும் கொள்ளப்படுகிறது. அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories