Kakka Thoppu Balaji
சென்னையின் பிரபல தாதாக்களில் ஒருவர் காக்கா தோப்பு பாலாஜி (39). 1990களில் சாதாரணமாக சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி, பின்னர் வியாசர்பாடி பிரபல ரவுடி நாகேந்திரன் தொடர்பால் தொடர் கொலைகள், ஆள் கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகளால் பிரபலமானார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஏழு கிணறு பகுதியில் உள்ள காக்கா தோப்பு என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்ததால் சக ரவுடிகளால் காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டு, போலீஸ் ரெக்கார்டிலும் காக்கா தோப்பு பாலாஜி ஆனார்.
Rowdy Kakka Thoppu Balaji
ரவுடிகளுக்கு இடையே நடந்த கொலைகள், கூலிப்படைகளை ஏவிக் கொலை செய்தல் போன்ற காரியங்களால் சென்னையின் பல காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளன. இவர் மீது மொத்தம் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 10 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சிறையே வாழ்க்கையாகிப்போன பாலாஜி சிறைக்குள் இருந்தே ஸ்கெட்ச் போட்டு வெளியில் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டுகளுக்கு ஏற்ப கூலிப்படைகளை ஏவிக் கொலை செய்துவந்ததும் தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே ரவுடி சி.டி.மணியுடன் காரில் வரும்போது அவர்களைக் கொல்லும் முயற்சி நடந்தது. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. காரை எதிர் திசையில் செலுத்தி, நூலிழையில் இருவரும் தப்பித்த சம்பவம் அப்போது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Kakka Thoppu Balaji Encounter
இந்நிலையில் ஆம்ட்ராங்க் கொலைக்கு பிறகு சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றதில் இருந்து ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சில ரவுடிகள் ஆந்திராவில் தலைமறைவானார்கள். இந்நிலையில் தலைமறைவாக இருந்த காக்க தோப்பு பாலாஜி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் புளியாந்தோப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: Weather Update: தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்! எப்போது குறையும் தெரியுமா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!
stanley Government hospital
எதற்காக என்கவுன்டர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் காவல்துறை தரப்பு இன்னும் வெளியிடவில்லை. இவர் ரவுடி நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.