மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை முதலில் நகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் தொடங்கப்படும். இது குறைபாடுகளைக் கண்டறிய உதவும். அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டவுடன், விரைவில் அனைத்து கடைகளிலும் செயல்படுத்தப்படும். ஒருவேளை மதுபாட்டிலை ஸ்கேன் செய்யாமல் விற்பனையாளர் விற்று விட்டால், மதுபாட்டில்கள் இருப்பை ஆடிட்டிங் செய்யும் போது மாட்டிக் கொள்வர். அப்போது கணக்கு வழக்கில் சிக்கல் வரும். தற்போது பில் நடைமுறை இல்லாத சூழலில், புதிய திட்டத்தின் படி வரவு, செலவு கணக்குகள் சரியான முறையில் பராமரிக்க உதவி செய்யும். டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுவுக்கு பில் கிடைக்கும் என்ற அறிவிப்பு மது பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.