Captain Miller : லண்டன் தேசிய விருது விழா... சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை தட்டிச்சென்ற கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை லண்டனில் வென்றுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் கேப்டன் மில்லர். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் நடிகர்கள் ஷிவராஜ்குமார், சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து இருந்தது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு போட்டியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இந்த நிலையில், தற்போது அப்படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... இவர் தான் என் புருஷன்... எங்களுக்கு 2 குழந்தைங்க இருக்கு... கணவரை அறிமுகப்படுத்திய நிவேதா தாமஸ்; ஷாக்கான Fans!
அந்த வகையில் லண்டன் தேசிய விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் விருதை வென்று சாதித்து உள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை வென்றுள்ள கேப்டன் மில்லர் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்காக வழங்கப்பட்ட கோப்பையுடன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.
ஒட்டுமொத்த படக்குழுவின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என சத்ய ஜோதி நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் வெல்லும் முதல் சர்வதேச விருது இதுவாகும். கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தான் தற்போது இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... “இதில் மறைக்க எதுவும் இல்லை..” தபு உடனான ரகசிய உறவு பற்றி ஓபனாக பேசிய நாகார்ஜுனா..