- Home
- Gallery
- இவர் தான் என் புருஷன்... எங்களுக்கு 2 குழந்தைங்க இருக்கு... கணவரை அறிமுகப்படுத்திய நிவேதா தாமஸ்; ஷாக்கான Fans!
இவர் தான் என் புருஷன்... எங்களுக்கு 2 குழந்தைங்க இருக்கு... கணவரை அறிமுகப்படுத்திய நிவேதா தாமஸ்; ஷாக்கான Fans!
தமிழில் ரஜினி, கமலுக்கு மகளாக நடித்து பேமஸ் ஆன நடிகை நிவேதா தாமஸ், தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

nivetha thomas
விஜய்யின் குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த போராளி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிவேதா தாமஸ், அப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் சரிவர ஓடாததால், குணத்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார் நிவேதா தாமஸ்.
Actress Nivetha Thomas
அந்த வகையில் ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து அப்ளாஸ் வாங்கிய அவர், பின்னர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக நடித்து தன்னுடைய யதார்த்த நடிப்பால் அப்படத்திற்கு பலம் சேர்த்திருந்தார். பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை நிவேதா தாமஸுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன.
இதையும் படியுங்கள்... மதுவ சும்மா விட மாட்டேன்... கெளதமின் கோபத்தால் போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து- நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் அப்டேட்
Nivetha Thomas marriage Rumours
பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸுக்கு அடுத்ததாக ரஜினிக்கு மகளாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதை ஏற்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ். அப்படத்தில் ரஜினி - நிவேதா தாமஸ் இடையேயான அப்பா - மகள் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார்.
Nivetha Thomas Husband
இதனிடையே அண்மையில் ட்விட்டரில் ஒரு சூசக பதிவை போட்டிருந்தார் நிவேதா தாமஸ். அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்தியை பரப்பினர். பின்னர் தான் நடித்த 35 திரைப்படத்தை பற்றி தான் அந்த பதிவை நிவேதா போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நிவேதா தாமஸ், தன்னை பற்றிய திருமண வதந்தி குறித்தும் பேசி இருக்கிறார்.
Nivetha Thomas Introduce her kids
நிவேதா திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானதை பார்த்து அவரது அம்மாவே ஆச்சர்யமாக கேட்டாராம். குழந்தைகள் ஏதும் இருக்கா என்றும் நக்கலாக கிண்டலடித்தாராம். அதற்கு நகைச்சுவையாக மேடையில் பதிலளித்த நிவேதா தாமஸ், இதுதான் என் கணவர், இவர்கள் தான் என்னுடைய இரண்டு மகன்கள். மூத்தவன் பெயர் அருண், இளையவன் பெயர் வருண் என படத்தில் தனக்கு கணவராகவும், மகனாகவும் நடித்தவர்களை அறிமுகப்படுத்தி அரங்கத்தில் இருப்பவர்களை சிரிப்பலையில் மூழ்கடித்தார் நிவேதா.
இதையும் படியுங்கள்... “அடுத்தவங்க என்ன வேணாலும் சொல்லுவாங்க.. ஆனா..” விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி..