“இதில் மறைக்க எதுவும் இல்லை..” தபு உடனான ரகசிய உறவு பற்றி ஓபனாக பேசிய நாகார்ஜுனா..
நடிகை தபு உடனான ரகசிய உறவு குறித்து பிரபல நடிகர் நாகார்ஜுனா மனம் திறந்து பேசி உள்ளார்.

Nagarjuna Akkineni
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் தனது நடிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ், ஹிந்தி மொழிகளிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார். தனக்கென ஒரு தனி ரசிக பட்டாளத்தையே நாகார்ஜுனா உருவாக்கி உள்ளார். குறிப்பாக அவர் உச்சத்தில் போது அதிகமான பெண் ரசிகைகளை அவர் கொண்டிருந்தார்.
தற்போதும் 65 வயதாகும் அவர் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது கட்டுக்கோப்பான உடலை மெயிண்டெயின் செய்து வருகிறார். அவரின் 2 மகன்களும் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டாலும் நாகார்ஜுனாவின் மவுசு இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை.
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரியான லக்ஷ்மியை நாகார்ஜுனா 1984-ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நாக சைத்னா எனினும் 1990-ம் ஆண்டு அவர் லக்ஷ்மியை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் 1192-ம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் அகில்.
இதனிடையே நாகார்ஜுனா பிரபல நடிகை உடன் கிசிகிசுவில் சிக்கினார். அவர் வேறு யாருமில்லை தபு தான். தபுவும் நாகார்ஜுனாவும் பல படங்களில் இணைந்து நடித்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
இருவரும் ஒரே வீட்டில் வசித்ததாகவும் கூறப்பட்டது. திருமணம் செய்து கொண்ட பிறகும் நாகார்ஜுனா தபு உடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அப்போது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
ஆனால் தபு உடனான தனது உறவு குறித்து ஒருமுறை நாகார்ஜுனா மனம் திறந்து பேசினார். தபு உடனான உறவு திருமணம் வரை சென்று நின்றுவிட்டதா என்று எழுப்பிய கேள்விக்கு நாகார்ஜுனா சிரிப்பையே பதிலாக அளித்தார். மேலும் பேசிய அவர் “ தபுவை பற்றி நான் மறைக்க எதுவும் இல்லை. அவர் பெயரை சொன்னால் என் முகம் பிரகாசிக்கும். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு அழகான நபர்..ஒரு அழகான தோழி. அவர் எப்போதும் அப்படியே இருப்பார்.
Nagarjuna - Tabu
தபுவுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர் என்னை விட எங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார். தபு ஹைதராபாத்தை சேர்ந்தவர்.. நானும் ஹைதராபாத்தில்தான் வளர்ந்தேன்.. எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. தபு ஹைதராபாத் வரும்போதெல்லாம்.. என் வீட்டில்தான் தங்குவார்.
அமலா அவரை நன்றாக கவனித்துக்கொள்வார். என் அப்பா இருக்கும் போது கூட தபு எல்லாருடனும் சேர்ந்து தான் சாப்பிடுவார். எங்கள் எல்லாரிடமும் சந்தோஷமாகப் பேசிவிட்டு வேலையை முடித்துவிட்டுத் திரும்பிச் செல்வது அவரின் வழக்கம்.
இதுதான் தபுவுக்கும் எனக்கும் உள்ள உறவு.. நாங்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே. என்னை காதலிப்பதால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. இவை அனைத்தும் வெறும் வதந்திகள். தபு எனக்கு நல்ல தோழி.. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. தபுவுக்கு முன்பிருந்தே திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூட அவர் ஒருமுறை என்னிடம் கூறியிருந்தார்.” என்று தெரிவித்தார்.