- Home
- Gallery
- கோட் சூட் அணிந்து மகன் மற்றும் மகள்களுடன் ஜம்முனு போட்டோஷூட் நடத்திய விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்
கோட் சூட் அணிந்து மகன் மற்றும் மகள்களுடன் ஜம்முனு போட்டோஷூட் நடத்திய விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்
விஜயகுமார் தன்னுடைய மகன் அருண் விஜய் மற்றும் மகள்கள் கவிதா, அனிதாவோடு நடத்திய அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை பார்க்கலாம்.

vijayakumar Family
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மனைவி முத்துக்கண்ணுக்கும் பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய். இவர்களில் அருண் விஜய் தவிர அனிதா மற்றும் கவிதா இருவரும் சினிமாவில் பெரியளவில் நடித்ததில்லை. அதிலும் குறிப்பாக அனிதா விஜயகுமார் சினிமா பக்கம் தலைகாட்டியதே இல்லை. பாரதிராஜாவே நடிக்க அழைத்தும் நோ சொல்லிவிட்டு படித்து டாக்டராகிவிட்டார் அனிதா.
Kavitha Vijayakumar
அனிதாவின் அக்கா கவிதா விஜயகுமார் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படத்தில் மட்டும் அவர் நடித்திருந்தார். பி வாசு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடித்த பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். மகள்களை சினிமாவில் நடிக்க வைக்காவிட்டாலும் மகனை தொடர்ந்து நடிக்க வைத்து தற்போது முன்னணி நடிகராக உயர்த்திவிட்டார் விஜயகுமார்.
இதையும் படியுங்கள்... வரலட்சுமி திருமணத்தில் இந்த சிக்கல் வரலாம்.. நிக்கோலாய் இப்படிப்பட்டவரா? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..
anitha vijayakumar
விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் வணங்கான், ரெட்ட தல ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் வணங்கான் திரைப்படத்தை பாலா இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. மறுபுறம் ரெட்ட தல படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
vijayakumar with his daughters and son
இந்நிலையில், நடிகர் விஜயகுமார் லண்டனில் நடைபெற்ற தனது பேத்தியில் வெட்டிங் ரிசப்ஷனில் கலந்துகொண்டபோது டிப்டாப்பாக கோட்சூட் அணிந்து தன்னுடைய மகள்கள் அனிதா, கவிதா மற்றும் மகன் அருண் விஜய் ஆகியோருடன் குரூப்பாக நின்று பேமிலி போட்டோ ஒன்றை எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Captain Miller : லண்டன் தேசிய விருது விழா... சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை தட்டிச்சென்ற கேப்டன் மில்லர்