- Home
- Gallery
- ஆபத்தானவரா நிக்கோலாய்? முதல் மனைவி டார்ச்சர் செய்யப்பட்டிருக்கலாம்! வருவுக்கு இருக்கும் பிரச்சனை! ஷாக் தகவல்!
ஆபத்தானவரா நிக்கோலாய்? முதல் மனைவி டார்ச்சர் செய்யப்பட்டிருக்கலாம்! வருவுக்கு இருக்கும் பிரச்சனை! ஷாக் தகவல்!
நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், பிரபல மருத்துவரும் திரைப்பட ஆர்வலருமான காந்த்ராஜ் வரலட்சுமியின் கணவர் குறித்து பேசி உள்ளார்.

varalaxmi Sarathkumar nicolai
நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி தமிழில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
varalaxmi Sarathkumar nicholai
இதன் மூலம் தென்னிந்தியா சினிமாவில் முக்கியமான நடிகையாக அவர் மாறினார். திடீரென நெகட்டிவ் ரோலில் நடிக்க தொடங்கிய அவர் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹனுமான் படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். தற்போது தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Actress Varalaxmi sarathkumar
இதனிடையே வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிக்கோலாய் மும்பையில் ஒரு ஆர்ட் கேலரியை நடத்தி வருகிறார்.
varalaxmi Sarathkumar
மும்பையில் செல்வாக்கு பெற்ற நபராக இருக்கும் அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்களுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. அவருக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
varalaxmi Sarathkumar wedding Reception Photos
இதை தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடந்தது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
varalaxmi Sarathkumar wedding Reception Photos
இந்த நிலையில் மருத்துவரும் திரைப்பட ஆர்வலருமான காந்தராஜ் வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ நிக்கோலாய் ஆபத்தானவராக கூட இருக்கலாம். அவர் தனது முதல் மனைவியை டார்ச்சர் செய்திருக்கலாம்.
varalaxmi Sarathkumar wedding Reception Photos
எதுவேண்டுமானாலும் இருக்கலாம் அது பற்றி நமக்கு தெரியாது. பல நடிகைகள் ஏற்கனவே திருமணமான நபருக்கு 2-வது மனைவியாக செல்கின்றனர். அதே போல் வரலட்சுமியும் இரண்டாவது மனைவியாக சென்றிருக்கிறார். விவாகரத்து பெற்ற நபரை திருமணம் அவரவரின் தனிப்பட்ட விருப்பம்..” என்று தெரிவித்தார்.
varalaxmi Sarathkumar wedding Reception Photos
தொடர்ந்து பேசிய அவர் “ வரலட்சுமிக்கு தற்போது 38 வயதாவதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம். இது ஒரு லேட் மேரேஜ் என்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம். இந்தியாவில் திருமணம் நடந்தால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்று கருதி தாய்லாந்தில் திருமணம் செய்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.