நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தான் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை 6 மணிக்கு இதய நோய் மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர். அதேபோல் விஜய் ரெட்டி மற்றும் நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோரு ரஜினிக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
24
Superstar Rajinikanth
ரஜினிக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்ததால் அவரது அடிவயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரஜினிகாந்துக்கு அடிவயிற்றுப் பகுதியில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு உள்ளதாம். ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்பதால் அவரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அடிவயிற்றில் ஸ்டெண்ட் பொறுத்தப்பட்ட பின்னர் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் பேசியதாக கூறப்படுகிறது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் ரஜினி இருப்பார் என்றும், அதன்பின்னர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்துவிட்டு அவரை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
44
Rajinikanth Health Update
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவர் நடித்து வந்த கூலி படத்தின் ஷூட்டிங்கும் தடை பட்டு உள்ளது. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். உடல்நிலை சரியாகும் வரை ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.