சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக் டூப் குக் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 5 ஆகிய நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சக்கைப்போடு போட்ட சமையல் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. ஆனால் அந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. வழக்கமாக குக் வித் கோமாளி என்றால் ஜாலியான நிகழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த முறை இந்நிகழ்ச்சி சர்ச்சைகள் நிறைந்த நிகழ்ச்சியாக மாறியது.
அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பெரியளவில் வெற்றியடையாததற்கு அந்நிகழ்ச்சியை முதல் நான்கு சீசன்களாக தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும் ஒரு காரணம். நான்கு சீசன்களாக தயாரித்த அந்நிறுவனம், ஐந்தாவது சீசனில் இருந்து வெளியேறியது.
25
Priyanka Deshpande
சொல்லப்போனால் குக் வித் கோமாளி கன்செப்டை உருவாக்கியதே மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான். விஜய் டிவியில் இருந்து விலகியதை அடுத்து அந்நிறுவனம் சன் டிவி உடன் கைகோர்த்தது.
சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்கிற சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு போட்டியாக தொடங்கிய மீடியா மேசன்ஸ் நிறுவனம், நடுவராக வெங்கடேஷ் பட்டை களமிறக்கியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. இதில் நாகேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா ஆகியோர் டைட்டில் வின்னர்கள் ஆகினர். அவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வென்ற பிரியங்காவுக்கு வெறும் 5 லட்சம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்ட நிலையில், அதைவிட மூன்று மடங்கு அதிக பரிசுத் தொகையை கொடுத்து அசத்தி இருக்கிறது டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி. பரிசுத் தொகையில் மட்டுமல்ல, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் சம்பளத்தை வாரிவழங்கி இருக்கின்றனர். அதன்படி குக் வித் கோமாளி சீசன் 5 மற்றும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி போட்டியாளர்களின் சம்பளம் பற்றி பார்க்கலாம்.
45
Cook With Comali Season 5
குக் வித் கோமாளி 5 சம்பள விவரம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட பூஜாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.9 ஆயிரமும், ஷாலின் சோயா, ஸ்ரீகாந்த் தேவா, வஸந்த வசி, அக்ஷய் கமல் ஆகியோருக்கு ரூ.10 ஆயிரமும், திவ்யா துரைசாமிக்கு ரூ.12 ஆயிரமும், யூடியூபர் இர்பான் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அந்நிகழ்ச்சியில் அதிகபட்ச சம்பளம் வாங்கியது பிரியங்கா மற்றும் சுஜிதா தானாம். இவர்கள் இருவருக்கும் ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
55
Top Cook Dupe Cook
டாப் குக் டூப் குக் சம்பள விவரம்
டாக் குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சைத்ரா ரெட்டி, ஷாலி, சுஜாதா மற்றும் டைட்டில் வின்னர் நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் நடிகர்கள் தீனா, சிங்கம்புலி ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இந்நிகழ்ச்சியில் அதிகபட்சமாக நடிகை சோனியா அகர்வால் மற்றும் நடிகர் பெப்சி விஜயன் ஆகியோருக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.