குக் வித் கோமாளியை விட டாப் குக் டூப் குக் டைட்டில் வின்னருக்கு கிடைத்த காஸ்ட்லி கிஃப்ட் - என்ன தெரியுமா?
குக் வித் கோமாளி மற்றும் டாப் குக் டூப் குக் ஆகிய சமையல் நிகழ்ச்சிகள் ஒரே நாளில் முடிவுக்கு வந்த நிலையில், அதன் வெற்றியாளருக்கு கிடைத்த பரிசுத் தொகை பற்றி பார்க்கலாம்.
Nagendra Prasad and Priyanka Deshpande
சமையல் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் அதில் காமெடியை புகுத்தி ஒரு அதகளமான சமையல் நிகழ்ச்சியை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது விஜய் டிவி. அந்நிகழ்ச்சியின் முதல் சீசன் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதால் ஆண்டுதோறும் ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வந்தது.
Cook With Comali Title Winner Priyanka
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், அதில் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா, நான்காவது சீசனில் மைம் கோபி ஆகியோர் டைட்டில் வின்னர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் அந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அதகளமாக ஆரம்பமானது.
முதல் நான்கு சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஆனால் ஐந்தாவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்திய மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் டிவியை விட்டு வெளியேறியதால் அவர்களோடு வெங்கடேஷ் பட்டும் அந்நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
Priyanka Deshpande
வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக களமிறக்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கியது விஜய் டிவி. இதில் போட்டியாளர்கள், கோமாளிகள் என கலகலப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்கிற உணர்வு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனிடையே மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது.
மறுபுறம் விஜய் டிவியில் இருந்து விலகிய மீடியா மேசன்ஸ் நிறுவனம் வெங்கடேஷ் பட் உதவியுடன் சன் டிவிக்கு தாவி, அங்கு டாப் குக் டூப் குக் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. விஜய் டிவியில் இருந்த ஜிபி முத்து, பரத், மோனிஷா போன்ற கோமாளிகள் சன் டிவிக்கு தாவி டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்... "கொறஞ்சது 1.5 வருஷமாகும்" பிரம்மாண்ட ஹிஸ்டாரிக் படம்.. ரெடியாகும் மாரி செல்வராஜ் - ஹீரோ யார் தெரியுமா?
Top Cooku Dupe Cooku Title winners
இதில் சோனியா அகர்வால், தீனா, விஜயன், ஐஸ்வர்யா தத்தா என பல பரிட்சயமான முகங்களும் போட்டியாளராக பங்கேற்றனர். முதல் சீசனிலேயே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டிஆர்பியில் பட்டைய கிளப்பியது டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி.
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 மற்றும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆகியவை ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளன. இதில் இரு நிகழ்ச்சிகளிலுமே பைனலில் 6 போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் பைனலில் பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.
Top Cooku Dupe Cooku
ஆனால் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் திடீர் ட்விஸ்ட் ஆக இரண்டு பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்படி நாகேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா ஆகியோர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோப்பையுடன் ரூ.20 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியோடு ஒப்பிடுகையில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான பிரியங்காவுக்கு வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் இடம்பிடித்த சுஜிதாவுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர சிறந்த கோமாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குரேஷிக்கும் 1 லட்சம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... என்னது நான் அடுத்த தளபதியா? அமரன் பட விழாவில் நச் பதில் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!