சிங்கப்பூர் முதல் அப்பல்லோ வரை... கடந்த காலங்களில் ரஜினிக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் ஒரு பார்வை

First Published | Oct 1, 2024, 9:54 AM IST

நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறதாம். 

இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ரஜினிக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இருதயவியல் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோவைவிட அதிநவீன பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவ குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினியின் உடல் நிலை சீராக உள்ளதாம். இதனிடையே இதற்கு முன்னர் ரஜினிகாந்த் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Superstar Rajinikanth

2011

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தார். அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டது

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரஜினிக்கு சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார்.

இதையும் படியுங்கள்... அப்பல்லோவில் அட்மிட் ஆன ரஜினிகாந்த்; திடீரென பிளானை மாற்றுகிறதா வேட்டையன் படக்குழு?

Latest Videos


Rajinikanth Treatment

2020

கொரோனா பெருந் தொற்று காலமான, கடந்த 2020ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அப்போது அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு கொரோனா அறிமுறி இருந்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அங்கிருந்து நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என ரிசல்ட் வந்தாலும், நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Rajinikanth Surgery

2021

நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு மேலாக அங்கு தங்கி அவர் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்.

Rajinikanth Health

2024

செப்டம்பர் 30ந் தேதி இரவு லேசான நெஞ்சு வலி, உடல்சோர்வு மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு என்னாச்சு; திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? மனைவி லதா விளக்கம்

click me!