கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் 73 வயதிலும் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் தற்போது உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
வேட்டையன்
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் படம் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் ரித்திகா, துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில், ரக்ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 10ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.