Published : Oct 01, 2024, 07:01 AM ISTUpdated : Oct 01, 2024, 10:11 AM IST
Rajinikanth Hospitalized : நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த ரஜினிகாந்த், நள்ளிரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். உடல் சோர்வு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24
Rajinikanth Hospitalized
ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிய வ்ண்ணம் உள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். இது திட்டமிட்ட மருத்துவ சிகிச்சை தான் என்றும் அவருக்கு வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை பெறவே ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 1ந் தேதி காலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும். இதயவியல் நிபுணர் சாய் சதீஷ் என்பவர் தான் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பரிசோதனைக்கு பின்னர் இரண்டு முதல் 3 நாட்கள் வரை நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
44
Rajinikanth admitted in Apollo Hospital
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிடவும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினரே தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.