தெலுங்கு திரை உலகை பொறுத்தவரை மிகச் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் ராம் சரண். நேரடியாக எந்த தமிழ் திரைப்படத்திலும் இன்னும் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அவருடைய "மாவீரன்" மற்றும் "ரத்தம் ரணம் ரௌத்திரம்" ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நிகழ்ந்து வரும் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண்.
கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "சிறுத்தா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் நாயகனாக தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது திரைப்படம் தான் "மகதீரா". பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானது அனைவரும் அறிந்ததே.