தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற வரிசையில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்ற போட்டி நடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிக ஆரோக்கியமான முறையில் நடந்து வருகிறது. விரைவில் இந்த போட்டி முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரண்டு நடிகர்களும் தங்களுடைய வேறொரு பரிமாணத்தை மக்கள் மத்தியில் இப்போது வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.
தனது அரசியல் பயணத்தை நோக்கி நகர்கின்ற தளபதி விஜய் ஒருபுறம் என்றால், தன்னுடைய கனவான கார் ரேசிங் பக்கம் தற்பொழுது சென்று வருகிறார் தல அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் தனது "துணிவு" திரைப்படத்தை வெளியிட்ட தல அஜித், இப்போது பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" என்ற திரைப்படத்திலும், தன்னுடைய ரசிகனும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி" என்கின்ற திரைப்படத்திலும் பிஸியாக அதுவும் நான் ஸ்டாப்பாக நடித்து வருகிறார்.
கமல் இல்ல.. சிவாஜியும் இல்ல - கோலிவுடில் முதன் முதலில் 10 கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் யார் தெரியுமா?