அதேபோல பல தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயணித்திருந்தாலும், பிரபல ஏவிஎம் நிறுவனத்தோடு இணைந்து பல வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்திருக்கிறார். கடந்த 1947ம் ஆண்டு வெளியான "நாம் இருவர்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம் தான் ஏவிஎம். அந்த நிறுவனத்துடன் போக்கிரி ராஜா, முரட்டுக்காளை தொடங்கி சிவாஜி வரை பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து 100 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் பயணித்து வருகிறது ஏவிஎம் நிறுவனம்.