MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேம் சேஞ்சர்.. ராம் சரனுக்காக மாறுபட்ட முயற்சி எடுக்கும் சங்கர் - என்ன அது? ஒர்க்அவுட் ஆகுமா?

கேம் சேஞ்சர்.. ராம் சரனுக்காக மாறுபட்ட முயற்சி எடுக்கும் சங்கர் - என்ன அது? ஒர்க்அவுட் ஆகுமா?

Shankar and Ram Charan : இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது பிரபல நடிகர் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" படத்தை இயக்கி வருகிறார் சங்கர்.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 30 2024, 10:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ram charan

Ram charan

கடந்த ஐந்து ஆண்டு காலமாக உருவாகி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் "இந்தியன் 2". ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றால் அது மிகையல்ல. திரைக்கதையின் தொய்வும், தேவையற்ற காட்சிகள் பல இணைக்கப்பட்டது தான் இந்த திரைப்படத்தின் தோல்வியாக பார்க்கப்படுகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

இருப்பினும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்வரும் 2025ம் ஆண்டு தனது இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தை வெளியிட தயாராக இருக்கிறார் சங்கர். இந்த சூழலில் "இந்தியன் 2" திரைப்படத்தோடு இணைந்து தெலுங்கு மொழியில் பிரபல நடிகர் ராம் சரணை வைத்து "கேம் சேஞ்சர்" என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் சங்கர்.

"நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தாணடி" குட் நியூஸ் சொன்ன சினேகன் கன்னிகா ஜோடி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Indian 2

Indian 2

தெலுங்கு திரை உலகை பொறுத்தவரை மிகச் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் ராம் சரண். நேரடியாக எந்த தமிழ் திரைப்படத்திலும் இன்னும் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அவருடைய "மாவீரன்" மற்றும் "ரத்தம் ரணம் ரௌத்திரம்" ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நிகழ்ந்து வரும் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண். 

கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "சிறுத்தா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் நாயகனாக தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது திரைப்படம் தான் "மகதீரா". பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானது அனைவரும் அறிந்ததே.

34
Ram charan RRR

Ram charan RRR

தொடர்ச்சியாக நல்ல பல திரைப்படங்களில் நடித்து வரும் ராம் சரண் கடந்த 2013ம் ஆண்டு ஒரு ஹிந்தி மொழி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இறுதியாக கடந்த 2022ம் ஆண்டு தனது "ரத்தம் ரணம் ரௌத்திரம்" திரைப்படத்தில் நடித்திருந்த ராம் சரண், அதே ஆண்டு தனது தந்தை சிரஞ்சீவி நடிப்பில் வெளியான "ஆச்சாரியா" என்கின்ற திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அவருக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் "கேம் சேஞ்சர்". 

ராம்நந்தன் ஐஏஎஸ் என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் இப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் விரைவில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராம்சரனோடு முதல் முறையாக இணையும் நடிகர் சங்கர், ஒரு சிறப்பான விஷயத்தை இந்த படத்தில் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

44
Game Changer

Game Changer

ஏற்கனவே நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான தன்னுடைய ஜீன்ஸ் திரைப்படத்தில் ஏழு உலக அதிசயங்களையும் ஒரே பாட்டில் வைத்து அசத்திய சங்கர், 7 முக்கிய மாநிலங்களில் இருந்து அம்மாநிலங்களின் சிறந்த இசை கருவிகளை பயன்படுத்தி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாதஸ்வரம் போன்ற இசை கருவிகள், கேரளாவிலிருந்து ஜெண்டை மேளம் போல 7 மாநிலங்களின் இசை கருவிகளை பயன்படுத்தி ஒரு விஷயத்தை செய்துள்ளாராம்.

அஜித்தின் குட் பேட் அக்லி.. படத்தில் இணையும் லோக்கியின் நண்பன் - வேற லெவல் சம்பவம் வெயிட்டிங்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved