என்னது நான் அடுத்த தளபதியா? அமரன் பட விழாவில் நச் பதில் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!

என்னது நான் அடுத்த தளபதியா? அமரன் பட விழாவில் நச் பதில் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Sep 29, 2024, 11:55 PM IST

Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "அமரன்". விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் தான் சிவகார்த்திகேயன். அதுவும் "கோட்" திரைப்படத்தில் தளபதி விஜயோடு இணைந்து அவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக நல்ல பல திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே "ரங்கூன்" என்கின்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் "அமரன்". 

இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் "ராஜ் கமல்" நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படக்குழு தீவிரமாக இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு மலேசியா நாட்டில் "அமரன்" திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்தது முடிந்தது.  

அப்போது ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, அடுத்த தளபதி நீங்கள் தான் என்று கூட்டத்திலிருந்து ரசிகர்கள் கூச்சலிட்டதை கேட்டவுடனேயே, "நிச்சயம் அப்படி கிடையாது.. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு உலகநாயகன் தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அவர்களுடைய நடிப்பை பார்த்து சினிமா கற்றுக் கொண்டவன் நான். அவர்களைப் போல கடினமாக உழைத்து, அவர்களைப் போல நல்ல திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படலாம். ஆனால் அவர்களாகவே ஆக நாம் ஆசைப்படுவது ரொம்பவும் தவறு" என்று நச்சு பதில் ஒன்றை கூறியிருக்கிறார்.

02:29வள்ளுவர் கோட்டம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட பாக்யராஜ் உடல்! கதறி அழும் குடும்பத்தினர்
01:42Director Bhagyaraj Passed Away: குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்.. இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!
03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Read more