Latest Videos

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு சித்தி ராதிகாவுடன் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி! வைரல் போட்டோஸ்!

First Published Jun 10, 2024, 10:25 PM IST

திருமண பத்திரிக்கை வைப்பதில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி, இன்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் சித்தார் ஆகியோரை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் ஓவ்வொரு நடிகையும், அறிமுகமாகின்றனர். ஆனால் அதற்க்கு கொஞ்சம் அதிஷ்டமும் வேண்டும் புத்திசாலி தனமும் வேண்டும் என்பதை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே நிலைக்க முடியும். இப்படி அதிஷ்டம் மற்றும் புத்திசாலித்தனம் இருப்பதால் தான், சமந்தா, நயன்தாரா, மஞ்சு வாரியர், த்ரிஷா ஆகியோர் 35 வயதை கடந்த பின்னரும் முன்னணி இடத்தில் உள்ளனர். 
 

இவர்களை போலவே கோலிவுட்டில் நிலையான ஹீரோயினாக இடம்பிடிக்கும் ஆசையில் அறிமுகமானவர் தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவரை தன்னுடைய முதல் படமான 'போடா போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகபடுத்தியது நயன்தாராவின் கணவர், இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. வரலட்சுமியின் நடன திறமைக்கும் தீனி போட்டது.

Ammu Abirami: முட்டி கிச்சு லவ்வு... பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி! வைரலாகும் புகைப்படம்!

இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வரு ஹீரோயினாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றியை கைப்பற்றாத நிலையில், புத்திசாலித்தனமாக யோசித்து... அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பல படங்களில் வில்லியாக நடித்து மிரளவைத்தார்.

இந்நிலையில் தன்னுடைய 39 வயதில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இப்போதே தீவிரமாக திருமண பத்திரிக்கை வைத்து வருகிறார்.

Keerthy Suresh: அடேங்கப்பா... கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

அதன்படி ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கனிமொழி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அப்பா மற்றும் சித்தியுடன் சென்று பத்திரிக்கை வைத்த வரு, இன்று நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனை அவர்கள் வீட்டில் சந்தித்து பத்திரிக்கை வைத்துள்ளார். அதே போல் நடிகர் சித்தார்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!