செல்லில் பேசிக்கொண்டே பெட்ரோல் போட்ட நபர்.. பக்கென பற்றிய டேங்க்.. அடுத்து நடந்து என்ன? பரபரப்பு வீடியோ!

Jun 16, 2024, 11:21 PM IST

பெட்ரோல் நிலையங்களில் செல்போனை தவிர்க்க வேண்டும் என்று அனுதினமும் விளம்பரங்கள் செய்யப்படுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால் என்ன தான் அரசும், தனியார் நிறுவனங்களும் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், பலரும் அதை கண்டு கொள்வதில்லை என்பது தான் கசப்பான உண்மை. 

அதை நிரூபிக்கும் வகையில் இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது குறித்த வீடியோ ஒன்றும் தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு, செல்போன் பேசிக்கொண்டே ஒரு நபர் பெட்ரோல் நிரப்ப வருகிறார். 

அவருடைய இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த நேரத்தில் திடீரென பெட்ரோல் டேங்க்கின் உள்ளே தீ மளமளவென பரவியது. அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் உரிமையாளரும், பெட்ரோல் நிரப்பிய அந்த நபரும் தப்பிய நிலையில், துரிதமாக செயல்பட்ட எரிபொருள் நிலைய ஊழியர் இருவர் அருகில் இருந்த தீயணைப்பாணை கொண்டு அந்த தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.