Tamil Nadu Government : முதல்வரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த 2024 - 25 ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
என்ன திட்டம் இது?
தமிழகத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயல்படுத்தும் ஒரு திட்டம் குறித்த இவ்வாண்டுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இரண்டு பெண் குழந்தை பிறந்து குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதாவது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுக்குள் அரசு விதிகளின்படி இந்த (2024-2025) நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்று வருகிறது. இதை பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து தற்பொழுது விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன தகுதி வேண்டும்?
இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இரு பெண் குழந்தைகள் பிறந்த 3 ஆண்டுகளுக்குள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் மேற்கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு அந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா 25,000கான வைப்புத் தொகை பத்திரம் பெற்றோரிடம் வழங்கப்படும்.
வயது வரம்பு என்ன?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மகளிரின் வயது 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், அதேபோல 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டவராக இருந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த சலுகை பெற அந்த குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பதோடு ஆண் வாரிசுகள் இல்லை என்ற சான்று வட்டாட்சியரிடம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து அதன் பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் இரண்டு குழந்தைகளில் ஏதேனும் ஒரு குழந்தை துரதிஷ்டவசமாக இறந்திருந்தால், அந்த குழந்தையின் இறப்பு சான்றிதழையும் இதில் இணைக்க வேண்டும். மேலும் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரின் வயது, இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவை ஒப்படைக்கப்பட வேண்டும்.
மருத்துவரிடம் குடும்ப கட்டுப்பாடு மேற்கொண்டதற்கான சான்றிதழ் இதில் இணைக்கப்பட வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் நீங்கள் இ சேவை மையை மையத்தை அணுகலாம்.
Father's day 2024: தந்தையர் தினத்தில் உங்க தந்தைக்கு இந்த கிப்ட்களை கொடுத்து அசத்துங்க!