அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. திமுக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
தேமுதிக விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் அறிவித்துள்ளது. அதிமுகவை தொடர்ந்து கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் அதே போன்ற ஜெராக்ஸ் காப்பி முடிவை எடுத்துள்ளது.
இதைப்பற்றி தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"2024ம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது.
வீட்டில் இருந்தே மாதம் ரூ.9,250 வருமானம்! நேரா போஸ்ட் ஆபிஸ் போய் இந்தத் திட்டத்தில் சேருங்க!
இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டுமொத்த மக்களும், கட்சியினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது"
இவ்வாறு தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷூ உருகும் அளவு சுட்டெரிக்கும் வெயில்... 12 நாளில் 1000 கி.மீ. ஓடிய அல்ட்ரா மாரத்தான் வீராங்கனை!