Arjun : "சார் இல்ல மாமனார்".. மகளை கலாய்த்த ஆக்ஷன் கிங் - செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா உமாபதி - Video!

Jun 15, 2024, 11:29 PM IST

தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் தான் அர்ஜுன். இறுதியாக தமிழில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக பல படங்களில் அவர் நடித்து வருகின்றார். குறிப்பாக தல அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் அவர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், பிரபல நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி ராமையா அவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் நடந்த முடிந்தது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் தங்களது தந்தைகளோடு இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேரில் பங்கேற்றனர். 

மேடையில் பேசிய நடிகை ஐஸ்வர்யா உமாபதி தனது கணவர் தந்தை மற்றும் மாமனார் தம்பி ராமையா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் தற்பொழுது அந்த காணொளி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.