US vs China: அமெரிக்காவையே அலறவிடும் சீனா.. எப்படி தெரியுமா?

Jun 16, 2024, 12:10 PM IST

உலக பொருளாதாரத்தில் இன்றும் போட்டி போட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகள் அமெரிக்கா, சீனா. இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்குள் யார் உலக பொருளாதாரத்தையும், அரசியலையும் கட்டுப்படுத்துவது என்று காலம் காலமாக மோதிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், பெருவில் உள்ள சான்காயில் ஆழ்கடல் துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. 

துவக்கத்தில் இந்த துறைமுகம் சீன அரசின் கீழ் வரும் காஸ்கோ ஷிப்பிங்கிற்குச் சொந்தமானது மற்றும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வந்தது. நடப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த துறைமுகம் முடிக்கப்பட்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங் கையால் திறந்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும்போது, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவுக்கு கடல் வழி போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். சீனாவிற்கு சோயா, மக்காச்சோளம் மற்றும் தாமிரம் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கான நேரமும் குறையும். 

பெருவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடியாக பெரிய சரக்கு கப்பல்களை கையாளும் துறைமுகத்தின் திறன் வர்த்தகத்தின் போக்கை மாற்றக் கூடும் என்று அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதனால் தென் அமெரிக்க வளங்களை பிரித்தெடுப்பதையும், கட்டுப்படுத்துவதையும் சீனா தன்னகத்தே எளிதாக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்கா கருதுகிறது. மேலும். இப்பகுதியில்  வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார செல்வாக்கு குறித்தும் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.