Latest Videos

Priya Bhavani: நடிகை பிரியா பவானி ஷங்கரா இது? பாவாடை சட்டையில் அடையாளமே தெரியல.. வைரலாகும் Childhood போட்டோ!

First Published Jun 11, 2024, 6:04 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய சிறு வயதில் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

அதிஷ்டம் வந்தால், கிள்ளி கொடுக்காது அள்ளி கொடுக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரியா பவானி ஷங்கர். தனியார் தொலைக்காட்சியில் 12,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து... இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார். 
 

இவருக்கு திறமையை தாண்டி, அதிஷ்டமும் கைகொடுத்தது. பிரியா பவானி நடித்த முதல் படமான 'மேயாத மான்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ரத்னா குமார் இயக்கி இருந்த நிலையில், இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இந்துஜா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்த நிலையில், இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டது.

நடிகையுடன் கள்ள தொடர்பு..! கையும் களவுமாக சிக்கினார்.. யுவா பற்றி சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகள் கூறி ஷாக் தகவல்
 

இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்', படத்தில் கிராமத்து பெண் ரோலில் நடித்தார். பின்னர்  'மான்ஸ்டர்', 'ஹாஸ்டல்', 'ஓ மணப்பெண்ணே', 'ருத்ரன்'. 'மாஃபியா', என பல படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது இவர் நடித்து முடித்துள்ள இந்தியன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 

தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் பிரியா பவானி... பட பிடிப்பு இல்லாத நாட்களில், தன்னுடைய காதலருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Aishwarya and Umapathy Wedding Photos: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் உமாபதி ராமையா! திருமண போட்டோஸ்!
 

சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தற்போது பாவாடை சட்டையோடு இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட... அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என தங்களின் கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!