VK Sasikala: அதிமுக அழிந்து விட்டதாக யாரும் சொல்லவேண்டாம்; என்னோட எண்ட்ரி ஆரம்பிச்சிடுச்சி - சசிகலா அதிரடி

Jun 17, 2024, 2:03 PM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா அதிமுவில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தொடர்ந்து அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவ்வபோது சில அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தாம் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.