Latest Videos

Samsungன் அடுத்த வெளியீடு.. விரைவில் வருது Samsung Galaxy Watch 7 மற்றும் Ultra - விலை கேட்டா தலை சுத்தும்!

By Ansgar RFirst Published Jun 17, 2024, 11:16 PM IST
Highlights

Samsung Galaxy Watch 7 : பிரபல சாம்சங் நிறுவனம் தனது அடுத்த இரு புதிய ஸ்மார்ட் வாட்ச் குறித்த அறிவிப்பை இப்பொது வெளியிட்டுள்ளது, அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பிரபல 91மொபைல்கள் நிறுவனம் வெளியிட்ட ஒரு தகவிலில், சாம்சங்கின் வரவிருக்கும் ஸ்மார்ட்வாட்ச்களின் உத்தேச விலை மற்றும் ஸ்பெக் குறித்த தகவல்களை அனுமானித்துள்ளது. வெளியான அறிக்கையின்படி, 40 மிமீ கேலக்ஸி வாட்ச் 7 அதன் முன்னோடியான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6-ஐப் போலவே விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Samsung Galaxy Watch 7 : வெளியான அறிக்கையின்படி, Samsung Galaxy Watch 7 40mm மாறுபாட்டின் விலை சுமார் 299 அமெரிக்க டாலர்களில் இருந்து (அதாவது தோராயமாக ரூ. 25,000) 310 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 26,000) வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் க்ரீம் ஒயிட், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் மார்பிள் கிரே வண்ண விருப்பங்களில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! மட்டையடியாகத் தாக்கும் ராஜீவ் சந்திரசேகர்!

அதே போல அதன் அல்ட்ரா மாடல், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அது 699 அமெரிக்க டாலர் முதல் (தோராயமாக ரூ. 58,400) 710 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 59,300) வரை விற்பனை செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா டைட்டானியம் கிரே வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

முந்தைய அறிக்கைகளின்படி, Samsung Galaxy Watch Ultra ஆனது 3nm செயல்பாட்டில் புனையப்பட்ட பென்டா-கோர் CPU உடன் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சிப்செட் கேலக்ஸி வாட்ச் 7 சீரிஸையும் இயக்கும் என்று கூறப்படுகிறது. வாட்ச் அல்ட்ரா ஒற்றை 47மிமீ அளவில் கிடைக்கும் மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பகத்தை வழங்குகிறது.

கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா Wi-Fi மற்றும் செல்லுலார் வசதிகளுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இது டைட்டானியம் சேஸிஸ், டூயல்-பேண்ட் (L1+L5) ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 100மீ வரை வாட்டர் ரெஸிஸ்டண்ட் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

பேடிஎம்-ன் டிக்கெட் பிசினஸை அலேக்காக தூக்கப்போகும் நிறுவனம் இதுவா.. ஆடிப்போன வணிக நிறுவனங்கள்!

click me!