டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! மட்டையடியாகத் தாக்கும் ராஜீவ் சந்திரசேகர்!

By SG Balan  |  First Published Jun 17, 2024, 3:59 PM IST

எலான் மஸ்க்கின் கருத்தை மறுக்கும் விதமாக, ராஜீவ் சந்திரசேகர் ஒரு பதிலைப் பதிவிட்டார். அதற்கு எலான் மஸ்க், "எதையும் ஹேக் செய்யலாம்" என்று ஒரு சுருக்கமாக பதிலளித்தார்.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எவ்வளவு பாதுகாப்பானவை என்பது குறித்து எலான் மஸ்க் உடன் கடுமையான விவாதம் நடத்திய முன்னாள் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெஸ்லா கார்கள் எல்லாம் ஹேக் செய்யக்கூடியவை தான் என்று கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அது துல்லியமான மிகக் குறைந்த நுண்ணறிவு கொண்ட சாதனம். இது வாக்குகளை மட்டுமே எண்ணுகிறது. எண்ணிக்கையை சேமிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

"அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஹேக் செய்ய முடியும்" என்ற எலான் மஸ்க் கூறினார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆதரித்து கருத்து தெரிவித்தார்.

 இதற்கு எதிராக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ராஜீவ் சந்திரசேகர் எலான் மஸ்க்கிற்கு விலாவரியாக பதில் சொல்லியிருக்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சராக இருந்த ராஜீவ், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு அதிநவீன இயந்திரம் அல்ல. அது ஹேக் செய்யப்படலாம் என்று எலோன் மஸ்க் நினைக்கிறார். உண்மையில் அவர் சொல்வது தவறு" என்று வாதிடுகிறார்.

உலகின் 100 மதிப்புமிக்க பிராண்டுகள் பட்டியலில் 3 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்!

"நான் எலான் மஸ்க் அல்ல. ஆனால் உலகத்தில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் சாதனமே ஏதும் இல்லை என்று தெரியும் அளவு  எனக்கு புரிதல் உள்ளது" என்று தெரிவித்துள்ள சந்திரசேகர், "அப்படியானால் எல்லா டெஸ்லா காரையும் ஹேக் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்" எனவுப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, எலான் மஸ்க் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பினார். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அவை ஹேக் செய்யப்படும் அபாயம் அதிகமாக இருப்பதால் அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

எலான் மஸ்க்கின் கருத்தை மறுக்கும் விதமாக, ராஜீவ் சந்திரசேகர் ஒரு பதிலைப் பதிவிட்டார். அதற்கு எலான் மஸ்க், "எதையும் ஹேக் செய்யலாம்" என்று ஒரு சுருக்கமாக பதிலளித்தார்.

ட்விட்டரில் இனி ரகசியமாக லைக் செய்யலாம்! பிரைவசியை உறுதிசெய்ய புதிய வசதி அறிமுகம்!

click me!