Kantar BrandZ என்ற நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் அறிக்கை 2024 ஐ வெளியிட்டுள்ளது.
டி.சி.எஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் (Infosys) ஆகிய இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது பெரிய ஐ.டி. நிறுவனங்கள் உலகின் மிக மதிப்புமிக்க 100 பிராண்டுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லும் இந்த வரிசையில் இருக்கிறது.
தொழில்நுட்ப ஜாம்பவான்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன.
Kantar BrandZ என்ற நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் அறிக்கை 2024 ஐ வெளியிட்டுள்ளது. இதில் ஏர்டெல் 73வது இடத்தில் உள்ளது. 74வது இடத்தில் இன்ஃபோசிஸ் இருக்கிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 46வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. வங்கியும் 47வது இடத்தில் உள்ளது.
ஷூ உருகும் அளவு சுட்டெரிக்கும் வெயில்... 12 நாளில் 1000 கி.மீ. ஓடிய அல்ட்ரா மாரத்தான் வீராங்கனை!
"உலகளவில் இடையூறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு கடினமான ஆண்டிலும், நாங்கள் எங்கள் பிராண்ட் வாக்குறுதியை வழங்குவதில் கவனம் செலுத்தினோம். டிஜிட்டல், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அடுத்த இலக்கை அடைய உறுதியுடன் இருக்கிறோம். அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என இன்ஃபோசிஸின் உலகளாவிய தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சுமித் விர்மானி சொல்கிறார்.
டிசிஎஸ் வணிக தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் தளத்தில் 16வது பெரிய பிராண்டாக உள்ளது. அதே நேரத்தில் இன்ஃபோசிஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. தொலைத்தொடர்பு சேவை தளத்தில் ஏர்டெல் 7வது இடத்தில் உள்ளது.
நர மாமிசம் எல்லாம் சகஜம்! சக மனிதனையே கொன்று உண்ணும் பழங்குடி மக்கள்! எங்க இருக்காங்க தெரியுமா?