Aishwarya and Umapathy Wedding Photos: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் உமாபதி ராமையா! திருமண போட்டோஸ்!
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையா மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் நேற்று நடந்து முடிந்தது. தற்போது இவர்களின் கல்யாண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவர் அறிமுகமானது கன்னட திரையுலகம் என்றாலும், இவருக்கு பல ஹிட் படங்களை கொடுத்தது தமிழ் சினிமாவும், தமிழ் திரையுலக ரசிகர்களும் தான்.
60 வயதை கடந்து விட்ட அர்ஜுனுக்கு சமீப காலமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அமையாத நிலையில், தன்னுடைய வயதிற்கு ஏற்ற போல் அழுத்தமான கதாபாத்திரங்களையும், வில்லன் ரோலையும் விரும்பி நடித்து வருகிறார். அதே போல் அர்ஜுன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி சின்னத்திரையிலும் பிரபலமானார்.
அர்ஜுன் நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஐஸ்வர்யா - அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொன்டு தம்பி ராமையாவின் மகள் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரின் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்ட, ஐஸ்வர்யா உமாவதியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று நடிகர் அர்ஜுன் கட்டி உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், உமாபதி மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்தில் குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குறிப்பாக, தம்பி ராமையாவும் மிகவும் நெருக்கமான கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரக்கனி. ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணத்தை ஒரு பிரைவேட் நிகழ்ச்சியாக குடும்பத்தினர் ஆசை பட்டதால் இப்படி நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இன்று மாலை நடைபெற உள்ள, உமாபதி - ஐஸ்வர்யா திருமண வரவேற்பு மிக பிரமாண்டாக நடைபெற உள்ளது. ரசிகர்களும் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா பட்டது யானை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதே போல் உமாபதி ராமையாவும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பித்தலாமாத்தி' திரைப்படம் ஜூன் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.