Bhairava Anthem: கல்கி 2898 AD படத்தில் இருந்து.. இந்த வருடத்தின் மிகப்பெரிய பாடலான 'பைரவா ஆன்ந்தம்' வெளியானது

Jun 17, 2024, 3:02 PM IST

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர், மெகா பட்ஜெட்டில் உருவாகும் படங்களை மட்டுமே தேடி பிடித்து நடித்து வரும் பிரபாஸ், 'சலார்' படத்தின் வெற்றிக்கு பின்னர், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 AD'.  கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தில்அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சயின்ஸ் பிக்சன் படமான இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடப்பெற்றுள்ள 'பைரவா ஆன்ந்தம்' பாடல் சற்று முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.