மொபைல் பிரைவசி இல்லையா... செல்போன் செயலிகளை ரகசியமாக பயன்படுத்த நிறைய வழி இருக்கு!

First Published Jun 18, 2024, 12:00 AM IST

பல காரணங்களை முன்னிட்டு மொபைல் ஆப்ஸை மறைத்து வைக்க வேண்டியிருக்கலாம். எந்த ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனிலும் தனியுரிமையை உறுதி செய்வதற்காக செயலிகளை மறைந்து வைகும் வசதி உள்ளது.

Hide Mobile apps

பணம் செலுத்தும் ஆப்ஸை குழந்தைகள் பயன்படுத்தாதவாறு வைத்திருப்பது முதல் அந்நியர்கள் மொபைலை நோட்டம் விடுவது வரை பல காரணங்களை முன்னிட்டு மொபைல் ஆப்ஸை மறைத்து வைக்க வேண்டியிருக்கலாம். எந்த ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனிலும் பிரைவசியை உறுதி செய்வதற்காக செயலிகளை மறைந்து வைக்க வழிகள் உள்ளன.

Hide Apps option

பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஃபோன்கள் மற்றும் டேப்லெட்களில் அப்ளிகேஷன்களை மறைப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. Samsung, Poco, Realme அல்லது Xiaomi ஃபோனில் இந்த ஆப்ஷன் லாஞ்சர் செட்டிங்சில் இருக்கிறது. Realme, Oppo மற்றும் OnePlus ஃபோன்களில் இந்த வசதி டயலர் என்ற பெயரில் உள்ளது.

Rename and change app icon

ஆப்ஸை மறைப்பதற்கு விருப்பம் இல்லை என்றால், நோவா, அபெக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் லாஞ்சர் போன்ற பிரபலமான லாஞ்சர்களை நிறுவி, முகப்புத் திரை மற்றும் ஆப் டிராயரில் இருந்து குறிப்பிட்ட செயலிகளை மறைக்கலாம். அல்லது மறைக்காமல் ஆப் ஐகானையும் பெயரையும் மட்டும் மாற்றலாம்.

Move apps to a folder

மொபைல் அப்ளிகேஷன்கள் குறைவாகக் காட்டும் விதமாக மாற்ற மற்றொரு வழி சில அப்ளிகேஷன்களை தனியாக ஃபோல்டருக்கு மாற்றலாம். நோவா போன்ற பெரும்பாலான லாஞ்சர்களில் இந்த வசதி இருக்கிறது. இது பிரைவசிக்கு உத்தரவாதம் கொடுக்காது என்றாலும் ஆப்ஸை சற்று குறைவாகக் காட்ட எளிதான வழிகளில் ஒன்று.

hide apps with lock

மொபைல் ஆப்ஸை மறைத்து வைக்க கூகுள் பிளே ஸ்டாரில் பல செயலிகள் உள்ளன. இந்த ஆப்ஸ் பெரும்பாலும் இலவசமாகவும் இருக்கும். இவற்றை பயன்படுத்தி எந்த அப்ளிகேஷனையும் ஒளித்து வைக்கலாம். இவற்றில் கைரேகை, பாஸ்வேர்டு, பேட்டர்ன் அல்லது பின் மூலம் லாக் செய்யும் பாதுகாப்பு அம்சமும் இருக்கும்.

user profiles

கம்ப்யூட்டர்களைப் போலவே, பெரும்பாலான ஆண்டிராய்டு மொபைல்களில் யூசர் புரொஃபைல்களை உருவாக்கும் ஆப்ஷனும் உள்ளது. இதை பயன்படுத்தி பல புரொஃபைல்களை உருவாக்கலாம். ஒவ்வொரு புரொஃபைலிலும் வெவ்வேறு விதமான செட்டிங்ஸ் வைத்துக்கொள்ளலாம். பல மொபைல்களில் Multiple users என்ற பெயரில் இந்த வசதி இருக்கிறது.

Latest Videos

click me!