வீடு முழுக்க ஹை ஸ்பீடு இன்டர்நெட் வேணுமா? சிறந்த வைஃபை இணைப்புக்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க...

First Published | Jun 3, 2024, 4:25 PM IST

இன்டர்நெட் இணைப்புகள் வைஃபை தொழில்நுட்பம் மூலம் வயர்லெஸ் இணைப்புக்கு மாறிவிட்டன. ஆனால் இந்த வைஃபை இணைப்பும் காலப்போக்கில் வேகம் குறையலாம்.

WiFi router

இப்போது பெரும்பாலான வீடுகளில் இன்டர்நெட் இணைப்புகள் வைஃபை தொழில்நுட்பம் மூலம் வயர்லெஸ் இணைப்புக்கு மாறிவிட்டன. ஆனால் இந்த வைஃபை இன்டர்நெட் இணைப்பும் காலப்போக்கில் வேகம் குறையலாம்.

Wi-Fi Speed Problem

வைஃபை இன்டர்நெட் ஸ்பீடு வேகமாக இருக்க வைஃபை ரூட்டரை முறையாக பயன்படுத்த வேண்டும். ரூட்டர் திறந்த, காற்றோட்டமாகவும் உயரமாகவும் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் ரூட்டர் தடையில்லாமல் சிக்னலை அனுப்ப முடியும்.

Latest Videos


Wi-Fi Speed issues

வைஃபை ரூட்டருக்குப் பக்கதிதல் உலோகப் பொருள் எதுவும் இருக்கக் கூடாது. ஏதாவது அருகில் வைத்திருந்தால் அதை வேறு இடத்திற்கு மாற்றிவிட வேண்டும். ரூட்டரில் வெளிப்புற ஆன்டெனா இருந்தால், அவற்றை செங்குத்தாக இருக்கும்படி சரிசெய்வது சிக்னல் தரத்தை மேம்படுத்தி, வேகத்தை அதிகப்படுத்தும். ரூட்டரை ரீஸ்டார்ட் செய்வது சிக்னலை வலுப்படுத்தும்.

Increase Wi-Fi Speed

ரூட்டரின் ஃபார்ம்வேர் மென்பொருளை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்துகொள்ளவும். இந்த ரூட்டர் ஃபார்ம்வேர் அப்டேட்டுகளை தயாரிப்பாளரின் இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம்.

Wi-Fi Speed Booster

ஒரே நேரத்தில் அதிக சாதனங்களை இணைத்து பயன்படுத்தினாலும், வேகம் குறையும். ரூட்டரின் திறனுக்கு ஏற்ப ஒரே நேரத்தில் அதிகபட்சமாக எத்தனை சாதனங்களை பயன்படுத்தலாம் என்பது வேறுபடும். எனவே எப்போதும் தேவையான சாதனங்களுக்கு மட்டும் வைஃபை இணைப்பை வழங்கவும். பேபி மானிட்டர், கார்ட்லெஸ் போன் போன்றவற்றை பயன்படுத்தினாலும் வைஃபை வேகம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

Wi-Fi Speed Guide

இந்த ஐடியாக்கள் கைகொடுக்கவில்லை என்றால், இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனத்தை அணுகி புகார் அளிக்கலாம். அவர்கள் ஒரு தொழில்நுட்ப வல்லுநரை நேரில் அனுப்பி சரிசெய்து தருவார்கள்.

Wi-Fi Speed tricks

செயல்பாட்டில் இருக்கும் டேட்டா பிளானும் இன்டர்நெட் ஸ்பீடு குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, சிறப்பான வேகத்தில் டேட்டாவை வழங்கும் பிளானுக்கு மாறிக்கொள்ளுங்கள்.

Wi-Fi Speed tips

பழைய ரூட்டரை பயன்படுத்துபவர்களுக்கும் இன்டர்நெட் ஸ்பீடு குறையக்கூடும். புதிய ரூட்டருக்கு மாறினால் வேகமான இணைய சேவையை அனுபவிக்கலாம்.

click me!