Ceiling Fan
சீலிங் ஃபேன் தினமும் ஓடிக்கொண்டே இருப்பதால் காற்றில் இருக்கும் தூசு ஃபேன் இறக்கைகளில் படிந்திருக்கும். நாளடைவில் இந்த தூசி படிவு அதிகமாகி பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால்தான் சீலிங் ஃபேன் பாதியாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
Ceiling Fan dust clean
ஃபேனில் தூசி அதிகமாகப் படித்திருப்பது தெரிந்தால், அதை வீட்டில் உள்ளவர்களே சுத்தம் செய்துவிடலாம். ஃபேனை ஆஃப் செய்துவிட்டு இறக்கையில் உள்ள தூசியைத் துடைத்து சுத்தம் செய்யலாம். இறக்கைக்கு மேலும் கீழும் பக்கவாட்டிலும் துடைத்து தூசியை அகற்ற வேண்டும்.
Ceiling Fan Condenser
இதுபோல மாதம் ஒரு முறை ஃபேனை சுத்தம் செய்துவந்தால் ஃபேன் வேகமாகச் சுற்றவில்லை என்ற பிரச்சினை ஏற்படாது. சிலிங் ஃபேன் மந்தமாக சுழல்வதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஃபேனில் இருக்கும் கன்டென்ஸர் (condenser) பழுதானாலும் ஃபேன் மெதுவாக சுற்ற ஆரம்பித்துவிடும்.
Ceiling Fan speed
ஃபேனில் மேல் பகுதியில் உருளை வடிவில் சிறியதாக இருப்பதுதான் கன்டென்ஸர். இதுதான் சீலிங் ஃபேனில் சுழலும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரூ.50 முதல் ரூ.80 வரை இந்த கண்டென்சர் கிடைக்கும். இந்த கண்டென்ஸரை மாற்றுவதும் எளிமையான வேலைதான். எலெக்ட்ரீசியன் இல்லாமல், நீங்களே மாற்றிவிடலாம். செய்யலாம்.
Ceiling Fan repair
சீலிங் ஃபேனில் கன்டென்ஸர் வயர் எப்படி கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனமாக பார்த்து நினைவில் வைத்துக்கொண்டு, பழைய கன்டென்ஸரைக் கழற்றிவிட்டு புதியதை மாட்டிவிடலாம். வசதிக்காக பழைய கன்டென்ஸர் இணைப்பை ஒரு போட்டோ எடுத்து அதைப் பார்த்து, கழற்றி மாட்டலாம்.
Ceiling Fan Cleaning
சீலிங் ஃபேன் ரொம்ப பழசாக இருந்தாலும் இறக்கைகளைச் சுத்தம் செய்து, கன்டென்ஸரையும் மாற்றிவிட்டால் போதும். பழைய பேன் புத்தம் புதிய ஃபேன் போல வேகமாகச் சுழல ஆரம்பித்துவிடும்.