கூகுள் மேப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்! தப்பித்தவறி இதை மட்டும் செய்யாதீங்க டியூட்!

First Published | May 20, 2024, 8:01 PM IST

கூகுள் மேப் பல நேரங்களில் நமது பயணங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால், இந்த கூகுள் மேப் பயன்படுத்துவதால் ரூ.5,000 அபராதம் செலுத்தும் சூழலும் ஏற்படலாம் என்று தெரியுமா?

Google Maps

கூகுள் மேப் பயன்பாடு தவிர்க்க முடியாத அளவுக்கு அதிகமாகி இருக்கிறது. செல்ல வேண்டிய இடத்துக்கு எளிதாக வழியைக் கண்டுபிடிக்கவும் விரைவாகப் பயணிக்கவும் கூகுள் மேப் உதவுகிறது.

செல்லும் பாதையில் போக்குரவத்து நெரிசல் இருக்கிறதா, டோல் கேட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு அதற்கேற்ப மாற்று வழியில் செல்லலாம். வேறு ஏதேனும் காரணங்களுக்காக குறிப்பிட்ட பாதையில் பயணிக்க முடியாத சூழல் இருந்தாலும் அதையும் கூகுள் மேப் காட்டிவிடுகிறது.

Google Maps Location Sharing

லைவ் லொகேஷன் ஷேரிங்:

பெரிய நகரங்களில் ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தையும் தெரிந்துகொள்ள முடிகிறது. பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், காரில் பயணிப்பவர்களுக்கு ஏற்ற பாதைகளையும் தனியே காட்டுகிறது.

குறிப்பிட்ட இடத்தின் லொகேஷனை பகிர்வதைப் போல, ஒரு நபர் தனது நகர்வுகள் லைவ் ஆக பிறருடன் பகிரும் ஆப்ஷனும் உள்ளது. இதன் மூலம் அந்த நபரின் நடமாட்டத்தை மறுமுனையில் உள்ளவர் டிராக் செய்ய முடியும். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத ஆட்களுடன் இதுபோல லைவ் லொகேஷன் ஷேர் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆதார் கார்டு மோசடியில் சிக்கினா அக்கவுண்ட்டே காலி... பாதுகாப்புக்கு நிபுணர்கள் தரும் டிப்ஸ்!

Tap to resize

Google Maps and Traffic Rules

5 ஆயிரம் ரூபாய் அபராதம்:

வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லாரும் தாங்கள் செல்லும் சவாரியின்போது கூகுள் மேப்பை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இதேபோல டெலிவரி ஏஜெண்டுகளுக்கும் கூகுள் மேப் கைகொடுக்கிறது. ஆனால் வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள் எச்சரிகையாக இருக்கவேண்டும்.

காரிலோ இருசக்கர வாகனத்திலோ சென்றுகொண்டிருக்கும் போது கையில் மொபைலை வைத்து கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மொபைலை பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்குவதை  போக்குவரத்து விதிமீறல் ஆகும். இதற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கலாம்.

Mobile Holder and Google Maps

மொபைல் ஹோல்டர்:

எனவே காரில் செல்பவர்கள் மொபைலைப் பார்க்க வசதியாக டாஷ் போர்டில் ஒரு மொபைல் ஹோல்டரை வைத்துகொள்ள வேண்டும். ஆட்டோ, பைக் ஓட்டுபவர்களும் இதேபோல ஒரு மொபைல் ஹோல்டரை வாங்கி பொருத்திவிடலாம். இந்த மொபைல் ஹோல்டர்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கிகொள்ளலாம்.

ஆனால், மொபைல் ஹோல்டர் வேண்டாம் என்று முடிவுசெய்து கையிலேயே மொபைலை வைத்துப் பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றால், போக்குவரத்து போலீசாரிடம் சிக்கனால் ரூ.5,000 தண்டத் தொகை செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக முதல் முறை தவறு செய்பவராக இருந்தால், பைக்கிற்கு ரூ.200, காருக்கு ரூ.1000 அபாரதம் விதிக்கப்படுகிறது.

புளூடூத் கேஜெட்ஸ் நிறைய யூஸ் பண்ணுறீங்களா? அப்ப ஹேக்கர்களின் டாக்கெட் நீங்கதான்!

Latest Videos

click me!