பேங்க் பேலன்ஸ் இல்லாமலே GPay மூலம் பணம் அனுப்பலாம்! அவசரத் தேவைக்கு உதவும் சூப்பர் வசதி!

First Published | Jun 2, 2024, 1:05 PM IST

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தக்கூடிய வகையில் ஈசியான வசதி அறிமுகமாகி உள்ளது. அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

GPay Loan

கூகுள் பே அப்ளிகேஷனில் மூலம் பணம் இல்லாமலே பேமெண்ட்களை மேற்கொள்ள 'Buy Now Pay Later' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலே இன்னொருவருக்குப் பணம் அனுப்பலாம்.

GPay Buy Now Pay Later

வங்கிக் கணக்கில் பணம் இல்லாதபோது 'Buy Now Pay Later' வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தினால், தேவையான தொகை கடனாகக் கொடுக்கப்படும். இதன் மூலம் உரிய பணத்தை செலுத்திவிடலாம்.

Tap to resize

Google Pay Update

இதேபோல ஆட்டோ ஃபில் (Autofill) அம்சமும்  கூகுள் பேயில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கெனவே குரோம் பிரவுசர் மற்றும் ஆண்டிராய்டு OS இல் உள்ளது.

Google Pay Autofill

ஆட்டோஃபில் முறையில் விவரங்களை தானாகவே நிரப்ப கைரேகையை அல்லது முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு PIN நம்பரை பயன்படுத்த வேண்டும்.

Autofill in GPay

பின்நம்பரை சரியாக டைப் செய்தவுடன் பாதுகாப்பு காரணமாக சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கும் சரியாக பதில் அளிக்க வேண்டும். பின் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும்.

GPay Autofill option

GPay Autofill அம்சம் மூலம் அனைத்து விதமான கார்டுகளின் விவரங்களையும் சேமித்து வைக்கலாம். பேமெண்ட் செய்யும்போது எளிமையாக கார்டு விவரங்களை நிரப்பி பணத்தைச் செலுத்தலாம்.

Latest Videos

click me!